அசட்டுச் சிரிப்பால் 14 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற சீன அதிகாரி
விபத்தைப் பார்வையிடச் சென்ற இடத்தில் சிரித்ததால், சீன அதிகாரி ஒருவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது சீன நீதிமன்றம்.
சிரித்ததெற்கெல்லாமா சிறைத் தண்டனைக் கொடுப்பார்கள் என அதிர்ச்சியடையாதீர்கள். சிரிப்பதற்கும் இடம், பொருள், ஏவல் இருக்கிறது.
ஆனால், சிலர் சமயமறியாமல் சிரித்து பிரச்சினையில் சிக்கிக் கொள்வதுண்டு. அப்படித் தான், சீன அதிகாரி ஒருவர் கட்டிட இடிபாடுகளைப் பார்வையிடச் சென்றபோது, சம்பவ இடத்தில் அசட்டுத்தனமான சிரிப்பொன்றைச் சிரித்து வைக்க, அதன் விளைவாக தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.