ஆளும் கட்சி ஆதரவாளர்களுக்கிடையிலான மோதல்
வடமேல் மாகாண சபைத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இரண்டு வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமேல் மாகாணசபை வேட்பாளர் சுமல் திசேரவின் ஆதரவாளர்கள் மற்றும் அக்கட்சியின் மற்றுமொரு வேட்பாளரான சனத் நிசாந்தவின் ஆதரவாளர்களுக்கிடையில் நேற்று முன்தினம் இரவு மோதல் எற்பட்டது.
இந்த மோதலில் அரச உத்தியொகத்தர்கள் உட்பட 7 பேர் காயமடைந்தனர்.
இச்சம்பம் தொடர்பில் சனத் நிசாந்தவின் ஆதரவாளர்கள் எனப்படும் சிலாபம் குமாரகட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த மூவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்