ஆட்டோ குடைசாய்ந்து விபத்து: குழந்தை மரணம்
ஆட்டோவொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு வயதும் மூன்று மாதங்களுமான குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
தொம்பை, கங்வெல்ல, ஊராபொல்ல பிரதேசத்தில் இவ் விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது.
ஆட்டோ சாரதி அவரது மனைவி, இவர்களது குழந்தை மற்றும் ஆட்டோ சாரதியின் மாமியார் பயணித்தவேளை இவ் விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த பெண்கள் இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் காயமடைந்த பெண் குழந்தை கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளது.
ஆட்டோ சாரதி தொம்பே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.