வடபுலத்தில் இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்; சுரேஸ் பிரேமச்சந்திரன்

Read Time:6 Minute, 16 Second

tna.suresh-010தமிழ் மக்களுக்கு ஜனநாயகம் உருவாக வேண்டுமானால் வடபுலத்தில் இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்; சுரேஸ் பிரேமச்சந்திரன்-
தமிழ் மக்களுக்குத் தேவைப்படும் முழுமையான ஜனநாயகம் உருவாக வேண்டுமானால் தேவைக்கு அதிகமாக வடபுலத்தில் நிலைகொண்டுள்ள இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமாக சுரேஸ் பிரேமச்சந்திரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

வடமகாணசபைத் தேர்தல் வெற்றிக்குப்பின்னர் வடபுலத்தில் உள்ள இராணுவத்தினை வெளியேற்றும் நடவடிக்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் தீவிரப்படுத்தப்படு;ம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழ் அரசுக் கட்சி அலுவலகத்தில் நேற்று நண்பகல் 11 மணியளவில் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இச் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியளலார் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இங்கையில் இடதுசாரிகளி தலைவர்களான டி.யு.குணசேகர, வாசுதேவநாணயக்கார, திஸ்சவிதாரன ஆயியோர் யாழ்ப்பாணத்திற்கு வந்து சிங்கள மக்கள் சுயநிர்ணைய உரிமையை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ஆகவே தமிழ் மக்கள் சுயநிர்ணைய உரிமை தொடர்பான கோரிக்கையை வைப்பது தவறான விடையம் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

முக்கியமாக இடதுசாரிகளின் தலைவர்கள் என்பவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பற்றி பேசக்கூடியவர்கள். அதே போன்று தொழிலாளர்களுடை சம்பள உயர்வுகள், வறுமைக்கோட்டிற்கு கீழி; வாழும் மக்களுடைய உரிமைகள் பற்றிப் பேசக் கூடியவர்கள்.

சுயநிர்ணைய உரிமையை அரசாங்கம் தராது அதனால் நீங்கள் கேட்கக் கூடாது என்Ùல், சம்பள உயர்வையும் அரசாங்கம் தராது அதைப்பற்றியும், அரசாங்கம் செய்யும் அடாவடித்தனங்கள் பற்றியும் யாரும் பேசக்கூடாது. அது அரசாங்கத்திற்கு வலிக்கும் அல்லது மேல்மட்ட சமூகத்திற்கு வலிக்கும் ஆகவே யாரும் பேசக்கூடாது என்றால் அது மிக மிக பிழையான ஒரு கருத்து.

தமிழ் மக்களுடைய நியாயமான கோரிக்கையை நாங்கள் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்தபோது. அதை தவறு என்று எவ்வாறு சிங்கள, பௌத்த தீவிரவாத சக்திகள் சொல்லுகின்றதோ, அதற்கு எந்தவிதத்திலும் குறைவில்லாமல் இந்த இடதுசாரிக் கட்சிகளும் கூட அதே விடையத்தை சொல்லியுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் தவராஜா பேசுகின்ற விடையம் கூட அதே விடையம்தான். குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் ஒரு சிப்பாயைக் கூட வடக்கில் இருந்து அனுப்ப முடியாது என்று தெரிவித்திருந்தார்.

மக்களை அடக்கி ஒடுக்கின்ற இராணுவம் தேவையில்லை என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடையதும், தமிழ் மக்களுடையதுமான முடிவு. இராணுவத்தினரை எவ்வாறு அனுப்பப் போகின்றோம் என்பது அடுத்த கட்ட நடவடிக்கை.

முதலில்; இராணுவம் எமக்குத் தேவையில்லை என்பதை நாங்கள் வெளிப்படுத்துகின்றோம். இலங்கை என்று நாட்டிற்குள் 2 இலட்சம் இராணுவ்தில் ஒரு இலட்சத்தி 50 ஆயிரம் இராணுவம் வடபகுதியில் நிலைகொண்டுள்ளது.

இது தேவையா? சர்வதேசம் சொல்லுகின்றது யுத்தம் முடிவடைந்த பின்னர் இவ்வாறு அதிகப்படியான இராணுவம் தேவையில்லை என்று. தமழ் மக்களுக்கு தேவைப்படுகின்ற முழுமையான ஜனநாயகம் உருவாக வேண்டும் என்Ùல் இராணுவம் வெளியேற வேண்டும்.

அதை மாகாணசபை நாளைக்கு வெளியேற்றுமா? இல்லையா? என்பது இல்ல. மக்கள் ஆணைதருகின்ற சந்த்ர்ப்பத்தில் இராணுவத்தினை வெளியேற்ற உள்ளாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி எவ்வாÙன நடவடிக்கைகள் எல்லாம் மேற்கொள்ள முடியுமே அவ்வாறான நடவடிக்கைகள் எல்லாம் எங்களால் முன்னெடுக்கப்படும்.

சுயநிர்ணைய உரிமை என்பது தமிழ் மக்களுக்கு முறுக்க முடியாத உரிமை. எனவே அரசாங்கத்திற்கு வலிக்கும் என்பதற்;காக நாங்கள் வாயை முடிக்கொண்டு இருக்க முடியாது. அதே போன்றுதான் தமிழ் மக்கள் என்றும் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வாழ விரும்பவில்லை எனவே இராணுவம் வெளியேற வேண்டும். என அவர் மேலும் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கூட்டமைப்பு ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற சந்தர்ப்பம் வழங்கியமை தவறு -சம்பிக்க
Next post (VIDEO) கூட்டமைப்பின் வவுனியா “புளொட்” வேட்பாளர்களை ஆதரித்து வெளியிடப்பட்ட குறும்படம்!!