By 16 September 2013 0 Comments

(VIDEO) கூட்டமைப்பின் வவுனியா “புளொட்” வேட்பாளர்களை ஆதரித்து வெளியிடப்பட்ட குறும்படம்!!

plote-elதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட “புளொட்” வேட்பாளர்களான வவுனியா நகரசபையின் முன்னைநாள் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன்(விசு), வவுனியா நகரசபையின் முன்னைநாள் உபதலைவர் க.சந்திரகுலசிங்கம்(மோகன்) ஆகியோரை ஆதரித்து வவுனியா ஜெயம் கொண்டானுடன் இணைந்து கோயில்குளம் இளைஞர்களால் “வாருங்கோ! வீட்டுக்கு வாக்களிப்போம்” என்கிற குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது.

படத்தொகுப்பாளர் தயா, ஒலிப்பதிவு ஈ.சி.சந்துரு, ஒலிப்பதிவு கே.ஜே.ஸ்டூடியோ, இதில் பங்கேற்றுள்ள கலைஞர்கள், எம்.ஜெகன், பீ.பாலேந்திரன், ஆர்.ஜெயரூபன், ஜே.சலிஸ்டன், எஸ்.ஜெயராஜ் ஆகியோர்.

இந்த குறும்படத்தில், வட மாகாணசபைத் தேர்தலின் முக்கியத்துவம் தொடர்பிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பக்கு அனைத்து தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் தௌவுபடுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வவுனியா நகரசபையின் தலைவராக ஜி.ரி.லிங்கநாதனும் (விசு), உபதலைவராக க.சந்திரகுலசிங்கமும் (மோகன்) இருந்த போது மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் இதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

குறிப்பாக வவுனியா ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி, வைத்தியசாலை மண்டபம் புனரமைப்பு, வவுனியா சனசமூக நிலையம் அமைப்பு, யாழ். பல்கலைக்கழக வவுனியா பீடம் அமைப்பு, தொழில்நுட்பக் கல்லூரி, எல்லைப்புறத்தைப் பாதுகாக்கும் குடியேற்றத் திட்டங்கள், கிராமங்களைப் பாதுகாக்கும் விசேட திட்டங்கள், கிராமங்களுக்கு மின்சார விநியோகம், பூந்தோட்டம் வீதி உள்ளிட்ட பல வீதிகள் அமைப்பு, சிறுவர் பூங்காக்கள், நகரின் பல பகுதிகளிலும் தலைவர்களின் உருவச் சிலைகள், காணிகள் வழங்குதல் போன்ற அவர்களின் அர்ப்பணிப்புடனான சேவைகளை நினைவுபடுத்துவதுடன், அவர்கள் வவுனியாவை தலைநிமிர வைத்தவர்கள் என்பதும் இங்கு ஞாபகப்படுத்தப்படுகின்றது.

அத்துடன் தமிழ் மக்கள் தமது வாக்குகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்திற்கே வழங்குவதுடன், மீண்டும் வவுனியாவைத் தலைநிமிர வைப்பதற்கு வவுனியா மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இலக்கம் 4இல் போட்டியிடும் “நாலும் தெரிந்த” புளொட் வேட்பாளர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்களுக்கும், இலக்கம் 5 இல் போட்டியிடும் “அஞ்சாத சிங்கம்” க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களுக்கும் தமது விருப்பு வாக்குகளை செலுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மீண்டும் இவர்கள் மாகாணசபைக்கு வந்து செய்ய விரும்பும் சேவைகள் பற்றியும் இங்கு விரிவாக சுட்டிக் காட்டப்படுகின்றது. “சலுகைகளை புறக்கணிப்போம் உரிமைக்காக குரல் கொடுப்போம்” என்று நிறைவடைகின்றது.

இதேவேளை இந்த குறும்பட வீடியோவையொட்டிய தெருக்கூத்து நாடாகம் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வவுனியாவில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களான ஜி.ரி.லிங்கநாதன்(விசு), க.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆகியோரை ஆதரித்து வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றது.

அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் பா.கஜதீபன் ஆகியோரை ஆதரித்தும் யாழ். குடாநாடு முழுவதிலும் இந்த தெருக்கூத்து நாடகம் இடம்பெற்று வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

plote.members



Post a Comment

Protected by WP Anti Spam