விபசார குற்றச்சாட்டு: நடிகை கைது பாலியல் நோய் குறித்த அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
விபசாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தொலைக்காட்சி நடிகையொருவரை கண்டி நீதிபதி நீதிமன்ற நீதிவான் வசந்தகுமார முன்னிலையில் ஆஜர் செய்தபோது நடிகையை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறிய லில் வைக்கும்படி உத்தரவிட்டார்.
இந்த தொலைக்காட்சி நாடக நடிகை விபசாரத்தில் ஈடுபடுவதாகப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றை அடுத்து ஒரு நபரை அமர்த்தி பொலிஸார் இந்த நடிகையை கைது செய்துள்ளனர்.
இந்த நடிகை சில தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துள்ளதாகவும் தான் நடித்த தொலைக்காட்சி நாடகமொன்று விரைவில்
தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த 22 வயதான நடிகை ஒரு நாளைக்கு விபசாரத்துக்காக 5000 ரூபா முதல் 10,000 ரூபா வரை அறவிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந் நடிகைக்கு பாலியல் நோய் அறிக்கையொன்றை பெற்றுக் கொள்வதற்காக எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.