கூட்டமைப்பை ஆட்சியமைக்க அனுமதிக்கக் கூடாது: விமல் கோரிக்கை

Read Time:3 Minute, 36 Second

vimal-cartoonசர்வதேச ரீதியில் அபகீர்த்தி வந்தாலும் பரவாயில்லை 13ஆவது திருத்தச் சட்டத்தின் முழு அதிகாரங்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வட மாகாணத்தில் ஆட்சியமைக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடமளிக்கக் கூடாது.

வடக்கில் சுயாட்சி ஏற்பட ஆளும் கட்சியின் பங்காளிகளும் பிரிவினைவாதிகளுக்கு உதவிகளைச் செய்கின்றனர் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை அவ்விடத்தை நான் நிரப்புவேன் என முள்ளிவாய்க்கால் மக்களுக்கு நவநீதம்பிள்ளை உறுதியளித்துள்ளார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு கூறினார். அவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

13 ஆவது திருத்தச் சட்டத்தில் காணப்படுகின்ற பொலிஸ், காணி மற்றும் மாகாணங்களை ஒன்றாக இணைக்கும் அதிகாரங்களை வட மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் இல்லாதொழிக்குமாறு வலியுறுத்தப்பட்ட போதிலும் ஆளும் தரப்பிற்குள் இருந்த பலரினால் அதற்கு தடை விதிக்கப்பட்டது.

ஆனால் வட மாகாண சபையின் தேர்தலின் பின்னர் கூட்டமைப்பினரின் ஆட்சி போனால் வடக்கில் தனி சுயாட்சி ஏற்படும் அச்சுறுத்தல் தொடர்பில் தற்போது யாரும் பேசுவதில்லை.

மூன்று மாகாணங்களிலும் தேர்தல் நடைபெறுகின்றன. ஆனால் இந்த மாகாண சபை தேர்தலில் பிரதான கட்சிகள் எவையும் விஞ்ஞாபனத்தை வெளியிடவில்லை. ஆனால் தேசியக் கூட்டமைப்பு வட மாகாண தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளது. இத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களானது தனி தமிழீழத்திற்கான முன்னெடுப்புக்களாகும்.

இந்த கொள்கையுடன் கூட்டமைப்பு வடக்கில் வெற்றி பெற்றால் தமது தமிழீழ கொள்கைகளுக்கு மக்கள் ஆணை வழங்கி விட்டார்கள் எனக் கூறி சர்வதேசத்தின் கவனத்தை மேலும் வலுவான நிலையில் பெற்று நாட்டை பேராபத்தில் தள்ளி விடும் சூழலே காணப்படுகின்றது.

ஆகவே நிலைமை மோசமாகவே உள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக தனது முழு அதிகாரத்தையும் வடக்கிற்கு பிரயோகித்து தமிழீழம் உருவாவதை தடுக்க வேண்டும். அதேபோன்று கூட்டமைப்பை ஆட்சி செய்ய இடமளிக்கக்கூடாது எனக் கூறியுள்ளார்.

vimal-cartoon

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இஸ்ரேலுக்கு ஆதரவாக எழுதிய இலங்கையருக்கு விருது
Next post 16 வயது மாணவி உட்பட இருவர் தூக்கிட்டு தற்கொலை