கடலில் மூழ்கிய உல்லாசப் கப்பல் ஒன்றரை வருடத்தின் பின்னர் மீட்பு!!

Read Time:2 Minute, 2 Second

18-italy-ship-600-jpgஇத்­தா­லிய கடற்­ப­ரப்பில் கடந்த வருடம் மூழ்­கிய கொஸ்டா கொன்­கோர்­டியா பய­ணிகள் கப்பல் 19 மணி நேர போராட்­டத்தின் பின்னர் நேற்று மீட்­கப்­பட்­டது.

2012ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 13ஆம் திகதி இத்­தா­லியின் டுகானி கடலில் கொஸ்டா கொன்­கோர்­டியா என்ற பய­ணிகள் கப்பல் மூழ்­கி­யதில் அதில் பய­ணித்த 3229 பய­ணிகள்இ 1023 ஊழி­யர்­களில் 32 பேர் பலி­யா­கினர். இக்­கப்­பலே நேற்று மீட்­கப்­பட்­டுள்­ளது.

சுமார் 20 மாதங்­க­ளாக மேற்­கொள்­ளப்­பட்ட மீட்பு திட்­டத்தில் கடலின் கீழ் பாரிய தளம் ஒன்­றினை அமைத்து கேபிள் மூலம் 290 மீற்றர் நீளமும் 114இ000 தொன் நிறையும் கொண்ட கப்பல் நிலைக்­குத்­தாக உயர்த்­தப்­பட்­டுள்­ளது.

12 மணித்­தி­யா­லங்­க­ளுக்குள் கப்­ப­ லினை உயர்த்­தலாம் என எதிர்­பார்க்­கப்­பட்­ட­போ­திலும் 19 மணித்­தி­யா ­லங்­க­ளி­லேயே உயர்த்­தப்­பட்­டதாக கொன்­கோர்­டியோ கப்பல் திட்­டத் தின் முகா­மை­யாளர் பிரான்கோ தெரிவித்­துள்ளார்.

இம்­மீட்­புப்­ப­ணியை அமெ­ரிக்­கா வின் டைடன் மற்றும் இத்­தா­லியின் மைக்கோ பெரி ஆகிய நிறு­வ­னங்கள் இணைந்து மேற்­கொண்­டுள்­ளது.

மீட்­புப்­பணி சிறப்­பாக முடி­வ­டைந் ­ததும் பணியில் ஈடு­பட்­டி­ருந்த முகா­மை­யாளர்இ தீய­ணைப்பு படை­வீ­ரர்கள் மற்றும் பொறியியலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கைதட்டி ஆர வாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகள் அமைப்பின் முன்னாள் கட்டளைத் தளபதி பதுமன் விடுதலை
Next post உயரம் குறைந்த முன்னாள் புலி இயக்க உறுப்பினர் உட்பட 3 ஜோடிகளுக்கு திருமணம்