மட்டக்களப்பில் வாகன விபத்து; ஒருவர் பலி
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ஜீப் வண்டிஇ தேத்தாத்தீவு பகுதியில்இ சைக்களில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சைக்களில் சென்றவர் கடும் காயங்களுக்கு உள்ளானநிலையில் நேற்றிரவு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
விபத்துடன் தொடர்புடைய ஜீப் வண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.