சுவாஷிலாந்து மன்னருக்கு 14–வது திருமணம்: 18 வயது அழகியை மணக்கிறார்

Read Time:2 Minute, 50 Second

d09f86f9-78dd-4d7b-8153-98d428d2a0c9_S_secvpfஆப்பிரிக்காவில் சகாரா பாலைவன பகுதியில் சுவாஷிலாந்து என்ற நாடு உள்ளது. இதன் மன்னராக மூன்றாம் இம்ஸ் வாதி உள்ளார்.

அந்நாட்டு சட்டப்படி மன்னர் விரும்பினால் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம்.

அதன்படி மன்னர் இம்ஸ்வாதி ஏற்கனவே 13 பெண்களை திருமணம் செய்து மனைவி ஆக்கி கொண்டார். இந்த நிலையில் இவர் 14–வது திருமணம் செய்ய உள்ளார்.

இவரது 14–வது மனைவி ஆகஇ போகும் அந்த பெண் பெயர் சின்டிஸ்வா டிலாமினி. 18 வயது நிரம்பிய அப்பெண் அழகிப் போட்டியில் பங்கேற்றவர்.

இவர் கடந்த ஆண்டு உயர்நிலை பள்ளி படிப்பை முடித்தார். அதை தொடர்ந்து பாரம்பரிய கலாசார அழகி போட்டியின் இறுதி போட்டியில் பங்கேற்றார்.

இந்த நிலையில் கடந்த மாதம் மன்னர் முன்பு நடன நிகழ்ச்சி நடந்தது. அதில் நாடு முழுவதும் இருந்து பல பெண்கன் கலந்து கொண்டு நடனமாடினர்.

அவர்களில் சின்டிஸ்வா அழகில் மயங்கிய மன்னர் அவரை தனது மனைவி ஆக்கி கொள்ள தீர்மானித்தார். அதன் விளைவாக தான் இத்திருமணம் நடைபெற உள்ளது.

இத்திருமன அறிவிப்பை அரண்மனையின் கவர்னர் திமோதி மெடிவா பாராளுமன்றத்தில் அறிவித்தார். அதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருமணத்துக்கு முன்பே மன்னருடன் குடும்பம் நடத்தும் மணப்பெண் கர்ப்பம் அடைய வேண்டும்.

அதன் பிறகே திருமணம் நடைபெறும். அதே முறைதான் சின்டிஸ்வாவுக்கும் கடை பிடிக்கப்பட உள்ளது.

மன்னருடன் வாழும் இவர் கர்ப்பம் அடைந்த பிறகே அதிகாரப்பூர்வமாக அவரது 14–வது மனைவி ஆவார்.

மன்னர் இம்ஸ்வாதியின் 3 மனைவிகள் இவரை விட்டு ஓடி விட்டனர். கடைசியாக திருமணம் செய்த ராணி லாஜிஜா மன்னனின் செக்ஸ் கொடுமை தாங்காமல் பிரிந்தார்.

மற்றொரு ராணி லாதுபே மன்னரின் நெருங்கிய நண்பர் சட்ட மந்திரியுடன் கள்ளக் காதலில் ஈடுபட்டார்.

அவருடன் ஒரே படுக்கையில் இருந்ததை மன்னர் பார்த்து விட்டார். அதை தொடர்ந்த அவரும் ஓட்டம் பிடித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அவ்வப்போது கிளாமர் படங்கள்..
Next post குறைந்த செலவில் ரொக்கெட்டை விண்ணுக்கு ஏவியது ஜப்பான்