இந்திய மீனவர்கள் காரைநகரில் கைது
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 19 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரைநகர் வடக்கு கடல் பகுதிக்குள் பிரவேசித்து இந்த மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது நேற்றிரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்திய மீனவர்களின் 5 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள், ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.