பொருளாதார வீழ்ச்சியால் ஆட்கள் இன்றி முடங்கிக் கிடக்கும் ‘ஆவிகளின் நகரம்’

Read Time:2 Minute, 19 Second

2152_newsthumb_p1யுக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் வில் 42 ஏக்கர் நிலப்பரப்பில் வண்ணமயமாக அமைக்கப்பட்டுள்ள வீட்டுத்தொகுதிகள் பொருளாதார வீழ்ச்சியினால் ஆட்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

‘கீவ்கொஸ்ட்ரொய் 1’ என்ற நிறுவனம் சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் 19ஆம் நூற்றாண்டு காலப்பகுதிக்குரிய கட்டிடங்களை தலைநகரின் ரவைன் எனுமிடத்தில் வடிவமைத்தது.

ஆனால் 2008ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுக்ரைனின் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால் இக்கட்டிடங்கள் விற்பனையாகாமல் போயுள்ளது.




இந்த கட்டிடங்களே தற்போது ஆட்கள் இன்றி காணப்படுகிறது. இதனால் இப்பகுதி செல்வந்தர்களின் ஆவிகளின் நகரம் என அழைக்கப்படுகிறது.

தற்போது நகரிலுள்ளவர்கள் திருமண புகைப்படங்கள் மற்றும் சிறியளவிலான படப்பிடிப்புக்களுக்கு மட்டுமே இதனைப் பயன்படுத்தி வருகிறார்களாம்.

இது குறித்து இக்கட்டிடங்களை வடிவமைத்த நிறுவனத்தின் உயரதிகாரி டராஸ் ஷியாப்கின் கூறுகையில், “இங்கு ஆட்கள் இல்லை என்பது தவறானது. 250 தொகுதிகளில் 50 தொகுதிகளை ஆட்கள் வசிக்கின்றனர். அவர்களின் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.





“எமது வாடிக்கையாளர்கள் இதனை ஒரு முதலீடாக கொள்­வ­ன­வு செய்துள்ளனர். 2008 ஆம் பொருளாதாரா வீழ்ச்சியினால் இவற்றின் பெறுமதி வெகுவாகப் பாதிக்கப்பட்டது உண்மைதான்.

இதனாலே கட்டிடங்கள் விற்பனையாகவில்லை. நிச்சயம் நிலைமை மாறினால் இதனை சிறந்தவொரு வீட்டுத்தொகுதியாக மக்கள் இனங்காணுவார்கள்” எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வடமாகாண சபை தேர்தலும்.. வெளியே தெரியாத வண்டவாளங்களும்!!
Next post அநா­த­ர­வாக காணப்பட்ட மூன்று சிறு­வர்­கள்..