உதட்டு முத்தமிட, செல்போனில் சத்தமாக பேச தடை: ஆஸ்திரியாவில் புதிய உத்தரவு
ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் பஸ், ரயில்களில் வாயுடன் வாய் வைத்து முத்தமிடுவது, செல்போனில் சத்தமாக பேசுவது, சீன உணவுகளை சாப்பிடுவது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன.
கலை கலாச்சாரத்திற்குப் பெயர் போன வியன்னாவின் பெருமையை காக்கும் வகையில் இந்த உத்தரவை அந்த நாட்டு போக்குவரத்துத்துறை அமுல்படுத்தியுள்ளதாம்.
பொது இடங்களில், பொதுப் போக்குவரத்துகளில் இனிமேல் இப்படி நடந்தால் அது அநாகரீகமாக கருதப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.