ஆடுகளின் வாய்க்குள் துணியை திணித்து இறைச்சிக் கடைக்கு விற்பனை செய்த நபர்
ஆடுகளின் வாயில் துணியைத் திணித்து, கடத்திச் சென்று இறைச்சிக் கடைக்கு விற்ற நபரொருவரை இம்மாதம் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி மாத்தளை நீதிவான் நீதிமன்ற நீதிவான் சம்பத்கமகே உத்தரவிட்டுள்ளார்.
மாத்தளை பிரதேசத்திலுள்ள ஆட்டுக் கொட்டிலுக்குள் நுழைந்து ஆடுகள் கத்தாமல் இருப்பதற்காக அதன் வாய்க்குள் துணியைத் திணித்து திருடிச் சென்று மாத்தளையிலுள்ள இறைச்சிக் கடைக்கு விற்ற போது பொலிஸாரிடம் சிக்கியுள்ளார் என்று மாத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.