நீராடச் சென்றவர் சடலமாக மீட்பு
நுவரெலியா மஸ்கெலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறவுண்லோ தோட்டத்தைச் சேர்ந்த 34 வயதுடைய கே. மானேல் பெரேரா என்பவர் மவுசாக்கலை நீர்த் தேக்கத்தில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் நேற்று மாலை வேளையில் குளிக்க சென்று காணாமல் போனதாக உறுவினர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் இவரின் சடலத்தை இன்று மீன் பிடிக்கச் சென்றவர்கள் கண்டு மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மஸ்கெலிய பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.