புதையல் தோண்டிய மூவர் கைது
வவுனியா மதவாச்சி பொலிஸ் பிரிவில் புதையல் தோண்டிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவரை மதவாச்சிப் பொலிஸார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பகுதிக்குச் சென்ற பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய உபகரணங்களையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மதவாச்சி மற்றும் எல்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என மதவாச்சி பொலிஸார் நடத்திய ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
சந்தேகநபர்கள் மூன்று பேரும் அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.