வெளிநாடுகளுக்கு மனிதக் கடத்தல்: மும்பாய் பொலீசார், புலிகள் மீது சந்தேகம்!
இந்தியாவின் மும்பாயின் ஊடாக வெளிநாடுகளுக்கு மனிதக்கடத்தலை மேற்கொள்ளும் முயற்சியின் பின்னாள் புலிகளின் செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக மும்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மும்பாயில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இலங்கை பயணி ஒருவர் வானூர்திக்கு ஏறும் முன்னர் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவத்தை அடுத்தே இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
குறித்த இலங்கையர் பிரித்தானியாவில் அடைக்கலம் கோருபவதாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
விநோத் ராஜ் என்ற குறித்த பயணி மும்பாய் ஊடாக பிரித்தானியா செல்வதற்காக கடந்த ஆகஸ்ட் 2 ஆம் திகதி பயணச் சீட்டை பெற்றிருந்தார்.
எனினும், அதேபெயரைக் கொண்டவர் இந்திய கடவுச் சீட்டை பயன்படுத்தி நேபாளம் காத்மண்டுவுக்கும் அதே தினத்தில் சென்றுள்ளதாக தரவுகள் கிடைத்துள்ளன.
இந்தநிலையில், செப்டெம்பர் 3 ஆம் திதி வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு உதவுவதாக கூறப்பட்டு இரண்டு இலங்கையர்கள் மும்பாய் வானூர்தி நிலையில் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, இந்த சம்பவங்களுக்கு பின்னர் புலிகள் இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக மும்பாய் காவல்துறையினர் தெரிவித்து;ளனர்.