வடக்கில் பிரி­வினை ஏற்­ப­டு­வ­தற்கு அரச தலை­மை­களே காரணம்! -சரத் பொன்­சேகா

Read Time:2 Minute, 13 Second

sarathவடக்கில் பிரி­வினை ஏற்­ப­டு­வ­தற்கு அரச தலை­மை­களே கார­ண­மாகும். ஜன­நா­ய­கத்­திற்கு முர­ணான வகை­யி­லா­வது ஆட்­சி­யினைக் கைப்­பற்றி நாட்டில் இரா­ணுவ ஆட்­சி­யினை பலப்­ப­டுத்­தவே அர­சாங்கம் விரும்­பு­கின்­றது என்று ஜன­நா­யகக் கட்­சியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்­சேகா தெரி­வித்துள்ளார்.

அர­சாங்த்தின் எதிர்ப்­பு­களைத் தாண்டி எமது இருப்­பினை தக்­க­வைத்துக் கொண்­ட­மையே எனக்குக் கிடைத்த பெரு வெற்­றி­யாகும். நாட்டின் இரண்­டா­வது பலம் வாய்ந்த கட்­சி­யாக நாம் மாறுவோம் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டியுள்ளார்.

ஜன­நா­யகக் கட்­சி­யினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்­பின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கருத்து தெரி­வித்துள்ளார்.

தென்­ப­குதி மக்கள் மத்­தியில் இன­வா­தத்­தினைத் தூண்டி நாட்டில் பிரி­வி­னை­வா­தத்­தினை உரு­வாக்கும் செயற்­பா­டு­களை அரச தலை­மை­களே மேற்­கொள்­கின்­றனர்.

வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வெற்றி பெறு­வ­தற்கும் தமிழ் மக்­க­ளி­டையே பிரி­வி­னை­யினை தூண்­டு­வ­தற்கும் அர­சாங்­கமே முக்­கிய காரண­மாகும்.

நாட்டில் பிரி­வினை பற்றி பேசு­வ­தற்கோ நாட்டை பிரிப்­பது பற்றி கதைப்­ப­தற்கோ அவ­சி­ய­மில்லை. இன்று நாட்டில் மக்கள் சமா­தா­ன­மா­கவும் ஒற்­று­மை­யா­கவும் வாழ்­கின்­றனர்.

அதை சீர்­கு­லைக்கும் விதத்தில் அர­சாங்­கமும் அரச தலை­மை­களும் செயற்­ப­டு­வ­தா­னது மோச­மா­ன­தொரு நிலையை ஏற்­ப­டுத்தும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வடக்கு மக்களுக்கு மலையக சிவில் அமைப்புக்கள் வாழ்த்து!
Next post ஜே வி பி செய்வதை, சரத் செய்ய முடியாது -வாசுதேவ நாணயக்கார