ஜெலட்நைட் குச்சிகளுடன் கைதான சந்தேகநபர் பிணையில் விடுதலை
புத்தளம் ஆனமடு தோனிகல பகுதியில் அனுமதிபத்திரம் இன்றி ஒரு தொகை ஜெலட்நைட் குச்சிகளுடன் கைதான சந்தேகநபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
5000 ரூபா ரொக்கப் பிணையிலும் இரண்டு இலட்சம் ரூபா சரீர பிணையிலும் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறிப்பிட்டுள்ளனர்.
புத்தளம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் சந்தேகநபர் ஆஜர்செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஆனமடுவ பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவலைப்பின் போது சந்தேகநபர் சுமார் 348 ஜெலட்நைட் குச்சிகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.