மனித உரிமைகள் சபையில், மன்னிப்புச் சபை அறிக்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பாக சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் அவையின் 24 வது கூட்டத்தொடர் இந்த மாதம் 9 ஆம் திகதி தொடங்கி 27ஆம் திகதி வரை இடம்பெற்று வருகின்றது.
இந்தக் கூட்டத்தொடரில் உலகத்தில் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகள், இலங்கையில் இடம்பெற்ற மனிதஉரிமைக்கு புறம்பான செயற்பாடுகள் சம்பவங்கள் குறித்து தங்களது அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளன.
உலகத்தின் மிகப்பெரிய மனித உரிமை அமைப்பான சர்வதேச மன்னிப்பு சபையின் இந்தியப் பிரிவு தமது அறிக்கையை நேற்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்துள்ளது.