பாகிஸ்தான் பூமியதிர்ச்சியில் 238 பேர் பலி!

Read Time:2 Minute, 16 Second

2268_newsthumb_Pakபாகிஸ்தானின் பலொசிஸ்தானில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த பாரிய பூமிதிர்ச்சியினால் குறைந்தது 238 பேர் உயிரிழந்துள்ளதாக பலொசிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.


பலொசிஸ்தான் மாகாணத்தின் அவரான் நகரிலிருந்து 145 மைல் தூரத்தில் புவியின் மேற்பரப்பிலிருந்து 23 கி.மீ ஆழத்தில் 7.8 ரிச்டர் அளவில் இப்பூமியதிர்ச்சி ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த பூமியதிர்ச்சியினால் பின்னிடைவான பலொசிஸ்தான் மாகாணத்தில் பல வீடுகள் தரைமட்டமாகியுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்குமிடமின்று திறந்தவெளியில் நேற்றைய இரவினைக் கழித்துள்ளனர்.

இப்பூமிதிர்ச்சி குறித்து பலொசிஸ்தான் அரசின் பேச்சாளர் ஜன் புலடி கூறுகையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 238ஆக அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கக் கூடும். மேலும் குறைந்தது 340 பேர் காயத்துக்குள்ளாகியுள்ளனர். அவரன் நகரிலேயே அதிகளவிலான உயிரிழப்பு ஏற்பட்டுளளது.


நாங்கள் மருத்துவ வசதிகளில் மிகவும் பின்னடைவாக இருக்கிறோனம். வைத்தியசாலைகளிலும் காமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க போதிய இடமில்லை என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமாக பலொசிஸ்தான் அமைந்துள்ளபோதிலும் அங்கு சனத்தொகை குறைவாக காணப்படுகின்றது.

இப்பூமிதிர்ச்சியானது 1200 கி.மீ தூரத்தினைக் கடந்து இந்தியாவின் டெல்லி வரையில் உணரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனித உரிமைகள் சபையில், மன்னிப்புச் சபை அறிக்கை
Next post நோர்வூட்டில் குளவி தாக்கி மூன்று பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில்..