நோர்வூட்டில் குளவி தாக்கி மூன்று பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில்..
நோர்வூட் பொலிஸ் பிரிவில் கிளங்கன் பிரிவில் குளவி தாக்குதலுக்கு இலக்காகி மூன்று பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்றுகாலை இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள் கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
36 மற்றும் 71 வயது பெண்களே பாதிக்கப்பட்டவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.