புத்தளத்தில் மீட்கப்பட்ட வாக்குச் சீட்டு மூடைகளை நீதமன்றத்தின் பாதுகாப்பில் வைக்குமாறு உத்தரவு!

Read Time:3 Minute, 20 Second

judge-004புத்­தளம் சென்ட் அன்ட்ரூஸ் மத்­திய கல்­லூ­ரியில் நேற்று முன்­தினம் மூன்று மூடை­களில் கண்­டெ­டுக்­கப்­பட்ட வாக்குச் சீட்­டு­களை நீதி­மன்­றத்தின் நேரடிப் பாது­காப்பில் வைக்­கு­மாறு புத்­தளம் மாவட்ட நீதி­மன்றம் நேற்று உத்­த­ர­விட்­டது.

அத்­துடன் இது தொடர்பில் பூர­ண­மான அறிக்­கை­க­ளையும் நீதி­மன்­றத்தில் சமர்ப்­பிக்க வேண்­டு­மென்றும் உத்­த­ர­வி­டப்­பட்­டது.

புத்­தளம் சென்ட் அன்ட்ரூஸ் மத்­திய கல்­லூ­ரியில் மீட்­கப்­பட்ட அனைத்து வாக்குச் சீட்­டு­களும் நேற்று புத்­தளம் மாவட்ட நீதி­மன்ற நீதி­பதி ரங்க திஸா­நா­யக்க முன்­னி­லைக்கு கொண்டு வரப்­பட்ட போதே இவ்­வாறு அவர் உத்­த­ர­விட்­ட­துடன் இது தொடர்­பான விசா­ர­ணைகள் எதிர்­வரும் மாதம் 9 ஆம் திகதி இடம்­பெறும் என்றும் தெரி­வித்தார்.

தேர்தல் வாக்­கெ­டுப்பு நிலை­ய­மாக செயற்­பட்ட இக்­கல்­லூ­ரியின் ஒரு பகு­தியில் புத்­தளம் நகரப் பகு­தியின் 46,50 வட்­டா­ரங்­க­ளுக்கு உரி­ய­தான ஆயிரக் கணக்­கான வாக்குச் சீட்­டுகள் மூடை­களில் கட்­டப்­பட்ட நிலையில் அதே பாட­சா­லையின் பிறி­தொரு பகு­தியில் காணப்­பட்ட நிலையில் மீட்­கப்­பட்­டன.

இந்த வாக்குச் சீட்­டு­களில் பெரும்­பா­லா­னவை இரண்­டாகக் கிழிக்­கப்­பட்­ட­தா­கவும் காணப்­பட்­டன. பெரு­ம­ளவு வாக்­குச்­சீட்­டுக்கள் மாண­வர்­களால் எடுத்துச் செல்­லப்­பட்­டுள்­ள­மையும் விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரிய வரு­கி­றது.

இந்த விட­யத்தை அறிந்த தேர்­தல்கள் ஆணை­யாளர் மஹிந்த தேசப் பிரிய நேர­டி­யாகச் சென்று நிலை­மை­களை அறிந்­த­துடன் தவ­றி­ழைத்த அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும் என்றும் கூறினார்.

இதே­வேளை, வடமேல் மாகாண முன்னாள் சுகா­தார அமைச்­சரும் மீண்டும் புத்­தளம் மாவட்­டத்­தி­லி­ருந்து மாகாண சபைக்கு தெரிவு செய்­யப்­பட்­ட­வ­ரு­மான அசோக வடி­க­மங்­காவ கருத்து தெரி­விக்­கும்­போது புத்­தளம் மாவட்டத் தேர்­தலை இரத்து செய்­து­விட்டு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்றார்.

இது இவ்வதாறிருக்க புத்தளம் மாவட்ட தேர்தலை இரத்துச் செய்து விட்டு புதிதாக தேர்தல் நடத்தப்பட வேண்டுமென கோரி நேற்று அங்கு ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெற்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கீரிமலை நகுலேஸ்வரத்தில் ஜனாதிபதிக்கு வாசஸ்தலம்; கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலை!
Next post ‘இலங்கை போரின் போது ஐ.நா. செயல்பட தவறி விட்டது’: ஐ.நா. பொதுச்செயலாளர் ஒப்புதல்