சீனாவில் கைக்குழந்தையை தூக்கி வீசி கொன்றவருக்கு தூக்குத் தண்டனை

Read Time:2 Minute, 27 Second

377280ee-29bc-4a55-acef-2f8dd17d7ce3_S_secvpfசீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கார் நிறுத்துமிடத்தில் காரை ஓட்டிச்செல்ல வழிவிடுவது தொடர்பாக ஹேன் லீ (39) என்பவர் ஒரு பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் கோபமடைந்த ஹேன் லீ தள்ளுவண்டியில் அந்த பெண் கொண்டுவந்த இரண்டு வயது கைக்குழந்தையை வண்டியுடன் பிடுங்கி வீசி எறிந்தார்.

பின்னர் அங்கிருந்து ஹேன் லீ தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த காயமடைந்த அந்த குழந்தை பின்னர் சிகிச்சை பலனின்றி இறந்துபோனது. ஜூலை மாதத்தில் நடந்த இச்சம்பவம் தொடர்பாக ஹேன் லீயிடம் விசாரணை நடைபெற்று வந்தது.

அதில், நான் எந்த உள்நோக்கத்துடனும் அந்த குழந்தையை கொலை செய்யவில்லை. ஏனெனில் நான் குடித்திருந்ததால் அந்த தள்ளுவண்டியை கடை சாமான் கொண்டுவந்த வண்டியென நினைத்தேன் என்று ஹேன்லீ வாதிட்டார். இந்த வழக்கு சீனாவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ஊடகங்களிலும் ஹேன் லீ-க்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஜெயிலில் இருந்து வந்த ஒரு வருடத்திற்குள்ளேயே ஒன்றும் அறியாத அப்பாவி குழந்தையை அவர் கொன்றிருக்கிறார். மேலும் அந்த குழந்தையின் தாயாரையும் ஹேன் லீ அடித்து இருக்கிறார் என்பது விசாரணையில் நிரூபணம் ஆகியுள்ளது. இதனால் அவருக்கு மரணதண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கிறேன்’ என்று டேக்ஜிங் மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் ஹேன் லீயை சம்பவ இடத்திலிருந்து காரில் தப்பிச்செல்ல உதவிய குற்றத்திற்காக, மற்றொருவருக்கு 5 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சூடானில் கலவரம்: இணையை தளங்கள் துண்டிப்பு
Next post -FOTOS- உள்ளாடை அழகிகளின் அசத்தலான அணிவகுப்பு !! (அவ்வப்போது கிளாமர்)