இலங்கையுடன் இணைந்து செயலாற்றினால், அதிகம் சாதிக்கலாம் -ஜூலி பிஷொப்
இலங்கையை தனிமைப்படுத்துவதை விட ஒற்றுமையாக செயற்படுவதன் மூலம் சிறந்த பெறுபேறுகளை அடைய முடியும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷொப் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான செயற்பாடுகளில் முன்னேற்றத்தை வெளிப்படுத்த இலங்கைக்கு சந்தர்ப்பம் உள்ளதாகவும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக ஜூலி பிஷொப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.