பிரகாசமடைந்து வரும் பேஸ்புக் உலகம்!!

Read Time:1 Minute, 35 Second

2280_newsthumb_facebook-thumஉலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளமான பேஸ்புக் பயன்படுத்தப்படும் இடங்களின் புதிய வரைபடத்தை பேஸ் புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நீல நிறப் பின்னணியைக் கொண்ட இப்படத்தில் பேஸ்புக் இணைப்புகள் அதிகமுள்ள இடங்கள் வெள்ளை நிறத்தில் பிரகாசமாக காட்டப்பட்டுள்ளன.


இதற்குமுன் 2010 ஆம் ஆண்டு வெளியான இத்தகைய படத்தைவிட புதிய வரைபடத்தில் அதிக இடங்கள் பிரகாச மாக உள்ளன. பேஸ்புக் பாவனை கடந்த 3 வருடங்களில் அதிகமாக வளர்ச்சியடைந்துள்ளதை இது வெளிப்படுத்துகிறது.

சீனா, ரஷ்யா, ஈரான், முதலான பேஸ்புக் பாவனை அரிதாகவுள்ள நாடுகள் தொடர்ந்தும் நீல நிறத்தில் காணப் படுகின்றன. அவுஸ்திரேலியாவில் மக்கள் அதிகம் வசிக்காத பிராந்தியங்களும் நீலமாக உள்ளன. இலங்கை, இந்தியா போன்ற நாடுகள் பிரகாசமாகவே உள்ளன.


பேஸ்புக்  இணையத்தளத்தை 2013 ஆண்டில் மாதாந்தம் 100 கோடிக்கும் அதிக எண்ணிக்கையானோர் பார்வையிடு வதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடத்துடன் ஒப்பிடு கையில் இது 23 சதவீத அதிகரிப்பாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மட்டக்களப்பில் குரங்குகள் அட்டகாசம்!
Next post சீன இளைஞருக்கு நெற்றியில் வளரும் 2ஆவது மூக்கு