நாகபாம்பு நங்கை மீதான பிடியாணை வாபஸ்
நாகபாம்பு நங்கையான நிரோஷா விமலரத்ன மீதான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமையால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது.
எனினும் பின்னர் தாமதமாக அவர் நீதிமன்றத்திற்கு வந்ததனையடுத்து அவர் மீதான பிடியாணை வாபஸ் பெற்றப்பட்டது.
அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மிருக வதைச் தடைச்சட்டத்தின் கீழ் பொலிஸாரினால் இவருக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.
இதனையடுத்து அந்தக் குற்றப் பத்திரத்தில் நீதிவான் கைச்சாத்திட்ட போது, அதில் கைச்சாத்திட வேண்டாமென நாக பாம்பு நங்கை சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிவானைக் கேட்டனர்.
கோரிக்கையை நிராகரித்த நீதிவான் இவ்வாறான சந்தர்பம் ஒன்றில் அதனைத் தன்னால் செய்ய முடியாது என்று தெரிவித்தார்.
அத்துடன் இந்த வழக்கினை நவம்பர் மாதம் 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, நாகபாம்பு நங்கை மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை அவரது சட்டத்தரணிகள் நிராகரித்தனர்.