அமெரிக்காவில் மூன்று சரக்கு ரயில்கள் மோதி விபத்து

Read Time:2 Minute, 26 Second

2292Train-2அமெ­ரிக்­காவின் டெக்சாஸ் மாநி­லத்தில்  மூன்று சரக்கு ரயில்கள் மோதிக் கொண்­டதில் நான்கு பேர் காய­ம­டைந்­துள்­ளனர்.

அமெ­ரிக்­காவின் டெக்சாஸ் மாகா­ணத்தில் நேற்று முன்­தினம்  அதி­காலை மூன்று சரக்கு ரயில்கள் மோதிக் கொண்­டதில் 20 பெட்­டிகள் தடம் புரண்­டன. ஊழியக் குழு­வி­னரில் நான்கு பேர் காய­ம­டைந்­தனர். இதில் இரு­வரின் நிலை கவ­லைக்­கி­ட­மாக உள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.


அம­ரில்லோ ரயில் நிலை­யத்தின் கிழக்குப் பகு­தியில் சரக்கு ரயில் ஒன்று நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

நேற்று முன்­தினம்  அதி­காலை கிழக்கு நோக்கி செல்லும் பி.என்.எஸ்.எப் ரயில் ஒன்று நின்­று­கொண்­டி­ருந்த சரக்கு ரயிலின் பின்­புறம் மோதி­யது.

அதே சமயம் மேற்கு நோக்கி சென்று கொண்­டி­ருந்த மற்­றொரு சரக்கு ரயில் இந்த இரு ரயில்­களின் மீது மோதி விபத்து ஏற்­பட்­ட­தாக அம்­மா­கா­ணத்தின் பொது பாது­காப்பு அலு­வ­லகம் தெரி­வித்­துள்­ளது.

நான்கு பேர் காய­ம­டைந்­துள்­ள­தா­கவும் அவர்கள் வைத்­தி­ய­சா­லையில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இந்த அலு­வ­ல­கத்தின் தலைமை அதி­காரி கிரிஸ் ட்ரூப்பர் தெரி­வித்­துள்ளார்.


இந்த இடி­பா­டு­களின் சேதங்கள் அதிகம் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஆயினும் ரயில்­களில் இருந்து அபா­ய­க­ர­மான பொருட்கள் எதுவும் வெளி­யே­ற­வில்லை என்று தகவல் தொடர்­பா­ள­ரான ஜோ பாஸ்ட் தெரி­வித்­துள்ளார்.

சேத மதிப்­பீ­டுகள் கணக்­கி­டப்­பட்­ட­போது ஒரு எஞ்ஜின் முழுவதும் சேதமடைந்துள்ளதும், 20-லிருந்து 30 ரயில் பெட்டிகள் வரை தடம் புரண்டிருந்ததும் குறிப்பிடப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளவட்ட நடிகர்களின் நாயகி யார் தெரியுமா?
Next post விமான நிலையத்தில், விசேடமான குளியல் அறைகள் தேவை!!