யுவதி மானபங்கம்: தமிழ் யுவதியின் உயிர் பறிக்கப்பட்ட கொடூரம் !!
யுவதி ஒருவர் தன்னை மானபங்கப்படுத்தும் முயற்சிக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் பொலிஸாரின் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததன் காரணமாக குறித்த யுவதி தற்கொலை செய்துகொண்ட பரிதாப சம்பவமொன்று மாங்குளம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து தெரிய வருவதாவது, மாங்குளம் பிரதேசத்தில் வசிக்கும் யுவதியினை மானபங்கப்படுத்தும் முயற்சிக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டும் பொலிஸாரின் நடவடிக்கையின்மை காரணமாக செல்வி இராஜா துளசி என்ற யுவதி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதன் பின்னர் தான் இவ்முயற்சிக்கு உறுதுணையாக இருந்த ஒரு சில நபர்கள் மட்டும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.