குருணாகல் காட்டில் ஜப்பான் பெண்ணின் சடலம் மீட்பு!!
குருணாகல் மாவட்டம் நாராம்பல பிரதேசத்தில் உள்ள காட்டு பகுதியில் ஜப்பானியப் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று மரண விசாரணைகள் நடைபெறவுள்ளன.
சடலமாக மீட்கப்பட்டவர் ஜப்பானிய பிரஜை என்பதால் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.