ஈன்ற சிசுவை கழிவறையில் வீசிச்சென்ற தாய் கைது!
சிசுவொன்றை கழிவறையில் வீசிச்சென்ற, ஹெலிஎல க்வின்ஸ்டவுன் தோட்டத்தைச் சேர்ந்த தாயொருவர் பதுளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்றையதினம் கைதான குறித்த பெண் தோட்டத் தொழிலாளர் எனத் தெரியவந்துள்ளது.
பதுளை பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.