பதுளை – கொழும்பு ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி!!
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று தலவாக்கலையை அண்மித்த பகுதியில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரே ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.