அனந்தி சசிகரனின் அமச்சர் பதவி தற்போது ஆலோசனையில் உள்ளது: இரா.சம்பந்தன்

Read Time:2 Minute, 0 Second

tna.sambandan-ponku-saniயாழ் மாவட்டத்தில் அதிக வாக்குகள் அடிப்படையில் இரண்டாவது இடத்தில் உள்ள அனந்தி சசிதரனுக்கு வடக்கு மாகாணசபை, அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படாமல் ஒதுக்கப்படுவதாக, வெளியான தகவல்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிராகரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில்,

“அனந்தி ஒதுக்கப்படுவதான இந்தக் குற்றச்சாட்டு தவறானது. அனந்தி மிகவும் இளையவர். வடக்கு மாகாணசபையில் எமக்கு இளையவர்கள் பலரும், அனுபவம் வாய்ந்தவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.

கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற, குறிப்பிட்ட துறைகளில் அனுபவம் மிக்க சிலரும் இருக்கின்றனர்.

முதலாவதாக, அனுபவம் உள்ளவர்களை கட்சி கவனத்தில் எடுக்க வேண்டும். இளையவர்கள் சிறிதுகாலம் காத்திருக்க வேண்டி ஏற்படலாம்.

வயதான, அனுபவம் வாய்ந்தவர்கள், மாகாணசபையின் ஆரம்பக்கட்டத்தை பொறுப்பேற்கக் கூடும். எவ்வாறாயினும் இந்த விவகாரங்கள் எல்லாமே தற்போது, ஆலோசனையில் தான் உள்ளன.” என்று இரா.சம்ப்நதன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தில், இரண்டாவது அதிக விருப்புவாக்குகளைப் பெற்ற அனந்திக்கு மாகாணசபையில் அமைச்சர் பதவியை வழங்க வேண்டும் என்று பெண்கள் அமைப்புகள் பலவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

tna.sambandan-ponku-sani

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உயிருடன் இருக்கும் அமைச்சர், எம்.எல்.ஏவுக்கு இறப்புச் சான்றிதழ்!!
Next post (PHOTOS) நயன்தாராவை போல் நடிகை அனுஷ்காவின் 2 காதலும் தோல்வி!!