ஒரே மரத்தில் 250 வகையான அப்பிள் பழங்கள்!

Read Time:2 Minute, 27 Second

2345_Apple-1பிரித்தானியாவைச் சேர்ந்த நபரொருவர் 250 வகையான அப்பிள்களை தனது தோட்டத்திலுள்ள ஒரே மரத்தில் ஆச்சரியகரமாக உருவாக்கியுள்ளார்.


பிரித்தானியாவின் மேற்கு ஸஸெக்ஸ் பகுதியின் சிதம் எனுமிடத்திலுள்ள 40 வயதான போல் பேர்னாட் என்பவரே இந்த அப்பிள் மரத்தினை 1989ஆம் ஆண்டு முதல் 24 வருடங்கள் செலவு செய்து தனது தோட்டத்தில் உருவாக்கியுள்ளார்.

வருடத்தின் ஒவ்வொரு குளிர்காலத்திலும் புதிய அப்பிள் வகையினை ஒட்டு முறை மூலம் இணைத்துள்ளார்.

இவ்வாறே இந்த ஒரு மரத்தில் அரிதான சமையல் அப்பிள் உள்ளிட்ட 250 வகையான அப்பிள் காணப்படுகிறது.

இது குறித்து பேர்னாட் கூறுகையில், “எனது குடும்பமே தோட்டக்கலையில் ஆர்வமிக்கவர்கள். எனது பெற்றோரே எனது தோட்டத்தினை உருவாக்க உதவினர்.


எனக்கு ஏராளமான மரங்களை நட விருப்பம். ஆனால் என்னிடம் போதிய இடம் இருக்கவில்லை. இதனாலேயே இந்த “குடும்ப மரம்” ஒன்றினை உருவாக்கினேன்.

இதில் சிறிய இடத்தில் பல வகையான அப்பிள்களை பெறமுடிந்தது. தற்போது இந்த மரத்தில் சமையல், பானம், சாப்பிடும் அப்பிள் என 250 வகையான சுவைமிக்க அப்பிள்கள் உண்டு.

இதில் எனக்கு வின்டர் ஜெம் எனும் சாப்பிடும் அப்பிள் பிடிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.


இவரிடம் செர்ரி, பியர்ஸ், பிளம்ஸ் உள்ளிட்ட மிகச்சிறிய 9 குடும்ப மரங்களும் உண்டு. உலகில் மொத்தமாக 6 ஆயிரம் வகையான அறியப்பட்ட அப்பிள் வகை உண்டாம்.

இதில் 2200 வகையாவை கென்டிலுள்ள தேசிய பழங்கள் சேகரிப்பகத்தில் உள்ளது. அவை அப்பிள் பிரியர்களிடம் பரிமாற்றம் செய்யப்படும்.

அவற்றில் தனது பழங்களும் உண்டு எனக் குறிப்பிட்டுள்ளார் பேர்னாட்.


Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 20 அடி பள்ளத்தில் பஸ் வீழ்ந்து விபத்து
Next post சிறுமியுடன் சிற்றுண்டிச்சாலையை உடைத்த சிறுவன் குடும்பம் நடத்தியமை அம்பலம்!