நானாட்டானில் 178 வருட பழைமை வாய்ந்த அடைக்கல மாதா திருச் சொரூபம் திருட்டு!

Read Time:1 Minute, 42 Second

stolen-003மன்னார் நானாட்டான் பிர­தே­சத்தில் அமைந்­துள்ள புனித அடைக்­கல மாதா ஆல­யத்தில் வைக்­கப்­பட்­டி­ருந்த சுமார் 178 வரு­டங்கள் பழைமை வாய்ந்த அடைக்­க­ல­மாதா திருச் சொரூபம் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை இனம் தெரி­யர்­த­வர்­க­ளினால் திருடிச் செல்­லப்­பட்­டுள்­ள­தாக ஆலய நிர்­வாக சபை முருங்கன் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்­ளது.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை 5 மணி தொடக்கம் 7 மணி வரை­யு­மான நேரப் பகு­திக்குள் குறித்த ஆல­யத்­தி னுள் சென்ற இனம் தெரி­யாத நபர்கள் கண்­ணாடிக் கூண்­டினுள் வைக்­கப்­பட்­டி­ருந்த ஒன்­றரை அடி உயரம் கொண்ட அடைக்­கல மாதா திருச்­சொ­ரூ­பத்தை வெளியில் எடுத்து அச்­சொ­ரூ­பத்­திற்கு போடப்­பட்­டி­ருந்த ஆடையைக் கழற்றி அதே இடத்தில் வைத்து விட்டு சொரூ­பத்தை திருடிச் சென்­றுள்­ளனர்.

ஆல­யத்தில் பணி புரி­கின்ற ஒருவர் ஆலை­யத்­தினுள் சென்று பார்த்த போது மாதாவின் சொரூபம் அங்கு இல்­லா­தமை தெரிய வந்­தது.உட­ன­டி­யாக குறித்த ஆலை­யத்தின் நிர்வாக சபையினர் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகாவலி கங்கையில் மூழ்கிய சிறுவர்கள் சடலங்களாக மீட்பு!!
Next post காதலன் உட்பட அறுவரால் யுவதி பாலியல் துஷ்பிரயோகம்!