பிரபாகரனின் நிலக்கீழ் பதுங்கு குழி தகர்ப்பு?!

Read Time:2 Minute, 57 Second

ltte.thalaivar-house2தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நிலக்கீழ் பதுங்கு குழி தகர்க்கப்பட்டிருக்கலாம் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள நிலக்கீழ் பதுங்கு குழியே இவ்வாறு தகர்க்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெரிய வருவதாவது,

குறித்த நிலக்கீழ் பதுங்குழி வீட்டுக்கு அருகிலுள்ள கிராமத்து மக்களை இராணுவத்தினர் நேற்று மாலை அங்கிருந்து வெளியேறி புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மைதானத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறிய பொதுமக்கள் மிக நீண்ட நேரம் மைதானத்தில் காத்திருந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை 6.45 மணிக்கு பாரிய வெடிப்புச் கேட்டதாகவும், இந்த வெடிப்புச் சத்தம் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் விதத்தில் இருந்தாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால்; குறித்த பகுதியிலிருந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் நிலக்கீழ் பதுக்குகுழி வீடு தகர்க்கப்பட்டிருக்கலாம் என்று மக்கள் தெரிவித்தனர்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்த நிலக்கீழ் பதுங்கு குழி வீட்டினைப் பார்வையிடுவதற்கு பெருமளவான மக்கள் வந்து சென்றனர் இதனால் இது சுற்றுலா மையமாக இதுவரை காலமும் இருந்து வந்தது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்த பதுங்கு குழி வீட்டினை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு படையினர் தடைவிதித்திருந்தனர்.

அந்த பதுங்கு குழி அமைந்துள்ள இடத்தைச்சுற்றி மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவற்றை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதையடுத்தே அந்த பதுங்கு குழியை மக்கள் பார்வையிடுவது தடைச்செய்யப்பட்டிருந்ததாக படைத்தரப்பினர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ltte.thalaivar-house2

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரயில் பய­ணச் ­சீட்டு விற்­ப­னையில் இரு வருடங்களாக மோசடி!
Next post இங்கிலாந்து உலகக்கிண்ண றக்பி குழாமில் 3 சகோதரர்கள்!!