இங்கிலாந்து உலகக்கிண்ண றக்பி குழாமில் 3 சகோதரர்கள்!!

Read Time:2 Minute, 14 Second

2365article-றக்பி லீக் உலகக் கிண்ணப் போட்டிகள் இம் மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளன. இதனை முன்னிட்டு இங்கிலாந்து அறிவித்துள்ள 24 வீரர்கள் அடங்கிய றக்பி குழாமில் பேர்ஜெஸ் சகோதரர்கள் மூவர் பெயரிடப்பட்டுள்ளனர்.

24 வயதான சாம் பேர்ஜெஸுடன் இரட்டைச் சகோதரர்களான 21 வயதுகளை உடைய ஜோர்ஜ் மற்றும் டொம் ஆகியோரும் இங்கிலாந்து குழாமில் பெயிரடப்பட்டுள்ளனர்.

இம் மூவரினது மூத்த சகோதரரான 26 வயதுடைய லூக் என்பவரை குழாமில் இணைத்துக்கொள்வதற்கு இங்கிலாந்து றக்பி பயிற்றநுர் ஸ்டீவ் மெக்னமாரா முன்வரவில்லை.

“”இதனையிட்டு லூக் ஏமாற்றம் அடைந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவரது இளைய சகோதரர்கள் மூவர் குழாமில் இடம்பெறுவது குறித்து அவர் மகிழ்ச்சி அடைந்திருப்பார்” என மெக்னமாரா குறிப்பிட்டார்.

“நான்கு சகோதரர்களும் குழாமில் இடம்பெற்றிருந்தால் அது ஒரு வரலாறாக பதிவாகியிருக்கும். எனினும் அணியைத் தெரிவு செய்வது எனது பொறுப்பல்ல” என்றார் மெக்னமாரா.

பேர்ஜெஸ் சகோதரர்கள் நாவல்வரும் சௌத் சிட்னி ரெபிட்டோஸ் கழகத்திற்காக விளையாடிவருகின்றனர்.

அவுஸ்திரேலியா, குக் ஐலண்ட்ஸ், இங்கிலாந்து, ஃபூஜி, பிரான்ஸ், இத்தாலி, அயர்லாந்து, நியூஸிலாந்து, பப்புவா நியூ கினி, சமோவா, ஸ்கொட்லாந்து, டொங்கா, ஐக்கிய அமெரிக்கா, வேல்ஸ் ஆகிய 14 நாடுகள் பங்குபற்றும் றக்பி லீக் உலகக் கிண்ணப் போட்டிகள் இம் மாதம் 26ஆம் திகதி முதல் நவம்பர் 30ஆம் திகதிவரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.

2365article-

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபாகரனின் நிலக்கீழ் பதுங்கு குழி தகர்ப்பு?!
Next post லொறிக்குள் ஏறி 18 வெங்காய மூடைகளை திருடி, விற்பனை செய்ய முயற்சித்த போது கைது!