செக்குடியரசு அணிக்கு `செக்’ வைத்தது கானா: 2-0 கோல் கணக்கில் வெற்றி

Read Time:2 Minute, 57 Second

W.Football.jpgஉலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த 2-வது ஆட்டத்தில் `இ’ பிரிவில் இடம் பிடித்துள்ள செக் குடியரசு-கானா அணிகள் மோதின. கோலோக்னேவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் செக்குடியரசு அணிக்கு, 48-வது இடத்தில் இருக்கும் கானா அணி அற்புதமாக ஆடி தண்ணி காட்டியது.
சாதாரணமாக நினைத்து இருந்த கானா அணியினரின் அபார ஆட்டம் செக்குடியரசு அணியினருக்கு தலைவலியை ஏற்படுத்தியது. இதனால் ஆட்டத்தின் 2-வது நிமிடத்திலேயே கானா முதல் கோலை அடித்தது. அந்த அணி வீரர் அஸ்மோக்கியான் இந்த கோலை அடித்து அணியை முன்னிலைக்கு அழைத்துச் சென்றார்.

பின்னர் இரு அணியினரும் கோல் எதுவும் அடிக்காததால் முதல்பாதி ஆட்டத்தில் கானா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. முதல்பாதியில் இருஅணியினரும் சம அளவில் பந்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருந்தனர். 2-வது பாதி ஆட்டத்தில் செக்குடியரசு அணியினர் கோல் அடிக்க அதிக முனைப்பு காட்டினர். ஆனால் அவர்கள் நினைத்ததுபோல் கோல் அடிக்கமுடியவில்லை. மாறாக கானா அணியினர் சிறப்பாக ஆடி செக்குடியரசு அணிக்கு `செக்’ வைத்தனர். அந்த அணியினரின் ஆக்ரோஷமான ஆட்டத்தை பார்த்து செக்குடியரசு அணியினர் அரண்டு போயினர்.

கானா அணியினருக்கு 2-வது பாதி ஆட்டத்திலும் பல வாய்ப்புகள் கிடைத்தன. இதில் எளிதான பெனால்டி கிக் ஒன்றும் அடங்கும். ஆட்டத்தின் 82-வது நிமிடத்தில் கானா அணி 2-வது கோலை அடித்தது. அந்த அணி வீரர் முண்டரி இந்த கோலை அடித்தார். விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் கானா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று செக்குடியரசு அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.

செக் குடியரசு அணி தனது முதல் ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை தோற்கடித்து இருந்தது. கானா அணி தனது முதல் ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் இத்தாலியிடம் தோல்வி கண்டு இருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வாழைச்சேனை ஈ.பி.டி.பி அலுவலகத்தில் கிளைமோர் கண்டுபிடிப்பு
Next post சர்ச்சையிலும் ஒரு அபார சாதனை: ‘தி டாவின்சி கோட்’ படத்தின் வசூல் ரூ.2,890 கோடி