கடும் நிதி சிக்கல் அரசு நிறுவனங்களை மூடியது அமெரிக்கா..!!!

Read Time:3 Minute, 9 Second

download (9)17 ஆண்டுகளில் இல்லா அளவிற்கு அமெரிக்காவில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வரும் நிதி ஆண்டுக்கான வரவு – செலவுக்கு அமெரிக்க பாராளுமன்றம் அங்கீகாரம் கொடுக்காததால் ஜனாதிபதி ஒபாமா அரசு கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது.

இதில் இருந்து தப்பிக்க அரசு நிறுவனங்களை மூடி விட முடிவு செய்துள்ளது. இதனால் உலக பொலிஸார் அரசு தள்ளாட துவங்கியிருக்கிறது. இதன் தாக்கம் இந்தியா முதல் உலகம் வரை பொருளாதார நிலையை ஆட்டம் காண செய்யும் என்ற அதிர்வலை ஏற்பட்டுள்ளது.

ஒபாமா அரசு 2 வது முறை பொறுப்பேற்றது முதல் நிதி நிலையில் பெரும் ஆட்டம் கண்டு வருகிறது. இதன் உச்சக்கட்டமாக ஒபாமா கொண்டு வந்த வரவு – செலவு பாராளுமன்றில் கடும் எதிர்ப்பு கிளம்பியதுடன் ஒப்புதல் கிடைக்கவில்லை.

இதனால் நிதிச்செலவினம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுகாதார திட்டத்திற்கு நிதி செலவினம் அதிகம் ஒபாமா அரசு ஒதுக்கியதால் இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சுகாதாரம், ராணுவம் விலக்கு:

இதனால் ஒபாமா நிர்வாகம் அரசு நிறுவனங்களை மூட முடிவு செய்தது. அரசு ஊழியர்களை சம்பளம் இல்லாத விடுப்பிற்கு செல்ல ஆணை பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக 7 லட்சத்து 83 ஆயிரம் பேர் வேலை இழப்பர். இந்த மாதச்சம்பளம் மட்டும் தந்து விடுவதாக வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய தேவையாக சுகாதாரம், ராணுவம், பாதுகாப்பு துறையினருக்கு மட்டும் இதில் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பணியில் இருப்பர். இந்த மூடல் நடவடிக்கையால் வாரத்திற்கு 100 கோடி இழப்பு ஏற்படும்.

கிளிண்டன் ஆட்சியில் ஏற்பட்டது:

கடந்த 17 ஆண்டு கால வரலாற்றில் இது போன்று அமெரிக்காவில் நடப்பது இந்த முறை மட்டுமே. முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன் ஆட்சி காலத்தில் 21 நாட்கள் அரசு நிறுவனங்கள் மூடிக்கிடந்தன.

இப்போது அமெரிக்க தள்ளாட்டம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக கச்சா எண்ணெய் விலை கிடு , கிடுவென உயரும். இதனையடுத்து பொருளாதாரம் பல கட்டங்களாக பாதிக்கப்படும் ஸ்திரமற்ற நிலை உருவாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கா­தலியை தாக்கி நிர்­வா­ணப்­ப­டுத்தி புகைப்­ப­ட­­மெ­டுத்த வர்த்­தகர்..!!
Next post வவுனியா, வீதி விபத்தில் ஆறு வயது சிறுமி பலி!!