முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு சகல உதவிகளையும் வழங்க வேண்டும் :இராதாகிருஷ்ணன்

Read Time:4 Minute, 14 Second

radakrishnan mpதமிழ் மக்­களின் அபி­லா­ஷைகள் வட மாகாண தேர்தல் முடி­வு­களின் மூலம் வெளிப்­பட்­டுள்­ளது. சம உரி­மை­க­ளுடன் ஐக்­கிய இலங்­கைக்குள் வாழ வேண்டும் என்­பது அனைத்து தமிழ் மக்­க­ளி­னதும் எதிர்­பார்ப்­பாகும். இதற்கு மதிப்­ப­ளித்து வட­மா­காண முத­ல­மைச்­ச­ராக பதவி ஏற்­றுள்ள முன்னாள் நீதி­ய­ரசர் சி.வி. விக்கி­னேஸ்­வ­ர­னுக்கு அர­சாங்கம் அனைத்து உத­வி­க­ளையும் வழங்க வேண்டும் என்று முன்னாள் பிர­தி­ய­மைச்சர் வே. இராதா­கி­ருஷ்ணன் தெரி­வித்துள்ளார்.

மேலும் பிரி­வினை வாதத்­தையோ, தனி நாட்­டையோ தமிழ் மக்­களோ அல்­லது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்போ விரும்­ப­வில்லை என்­பது ஜனா­தி­பதி முன்­னி­லையில் வட மாகாண முத­ல­மைச்சர் பதவி ஏற்­ற­போது வெளிப்­பட்­டுள்­ளது. ஆகவே, வீண் இன­வா­தத்தை தூண்­டாமல் அமைச்­சர்­க­ளான சம்­பிக்க ரண­வக்க, விமல் வீர­வன்ச ஆகியோர் தமது அமைச்­சுக்­களால் முடிந்த உத­வி­களை தமி­ழர்­க­ளுக்கு செய்ய முன்­வர வேண்டும் எனவும் அவர் கேட்­டுக்­கொண்டார்.

இது குறித்து முன்னாள் பிரதி அமைச்சர் வே. இராதா­கி­ருஷ்ணன் கூறு­கையில், வட மாகாண தேர்தல் முடி­வுகள் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பாரிய வெற்­றியை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது. இது வர­வேற்­கப்­பட வேண்­டிய விடயமும் ஆகும். முன்னாள் உயர் நீதிமன்ற நீதி­ப­தியும் கம்பன் கழக தலைவருமான சி.வி.விக்கி­னேஸ்­வரன் முத­ல­மைச்­ச­ராக பத­வி­யேற்­ற­மை­யா­னது முக்­கி­ய­மா­ன­தொரு விட­ய­மாகும்.

சந்­தே­கத்­திற்கு இட­மின்றி அவ­ரது தலை­மைத்­து­வத்தின் கீழ் வட­மா­காணம் பாரிய அபி­வி­ருத்­தி­யினை அடையும். அத்­தோடு பொது­மக்­களின் வாழ்­வா­தாரம் பாரிய பிரச்­சி­னை­க­ளாக காணப்­படும் மீள் குடி­யேற்றம் மற்றும் வித­வைப்­பெண்­களின் விவா­க­ரத்து போன்ற விட­யங்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­பட்டு தீர்­வு­களும் எடுக்­கப்­படும்.
குறிப்­பாக ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ முன்­னி­லையில் பத­விப்­பி­ர­மாணம் செய்து கொண்ட சி.வி விக்கி­னேஸ்­வ­ரனின் நிலைப்­பாடும் அதற்கு பின்­ன­ரான அவர் வலி­யு­றுத்­திய விட­யங்­களும் முக்­கி­ய­மாக அவ­தா­னிக்­கப்­பட வேண்­டி­யவை ஆகும்.

அதா­வது தமிழ் மக்கள் தமது உரி­மை­க­ளுடன் வாழ விரும்­பு­கின்­றனர். அத்­துடன் தமிழ் மொழி பாரம்­ப­ரியம் மிக்­கதும் சமத்­து­வ­மிக்­க­து­மான மொழி என்­பதால் அதனை பாது­காக்­கவும் கலா­சார பாரம்­ப­ரிய தொன்­மை­களை உணர்வு மூல­மாக தமிழ் மக்கள் முன்­னெ­டுப்­ப­தற்­கான அனைத்து உரி­மை­க­ளுக்கும் சந்­தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் என்பது அவரது விருப்பமாகும்.

ஆகவே, அரசாங்கம் இந்த விடயங்களுக்கு முக்கித்துவம் அளித்து ஜனாதிபதி உள்ளிட்ட அரச பிரிவுகள் தேவையான அனைத்து உதவிகளையும் வட மாகாண முதலமை ச்சருக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச படம் காட்டிய அதிபர்..!!
Next post விமானத்தில் பயணிக்க பயந்து டுபாயில் தங்கியிருந்த இங்கிலாந்து சிறுவன்