படகு விபத்தில் 300 பேர் இறப்பு!!

Read Time:2 Minute, 19 Second

e8e135b0-d4b1-43e7-8d69-27e311a53b24_S_secvpfஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் வறுமை, உள்நாட்டு சண்டை காரணமாக மக்கள் ஐரோப்பிய நாடுகளில் சட்ட விரோதமாக குடிபுகுந்து வருகின்றனர். அவர்கள் இத்தாலியின் லாம்பெடுசா தீவு வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வது வழக்கம். அப்படி நுழைய முயன்ற நிறைய பேர் இத்தாலியில் அகதிகளாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த வியாழன் அன்று சிறிய படகு ஒன்றின் மூலம் 500-க்கும் மேற்பட்டோர் இத்தாலி லாம்பெடுசா தீவு வழியாக ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்றனர். அப்போது அந்த படகு விபத்துக்குள்ளானது. இதில் இருந்த 500 பேரும் அப்போது கடலில் மூழ்கினர். இதில் 155 பேர் மட்டும் மீட்கப்பட்ட நிலையில் மற்ற அனைவரும் இறந்து போயினர்.

இதுவரை 274 பேரின் உடல்களை கடல் மீட்புக்குழுவினர் தேடி எடுத்துள்ளனர். இப்பகுதிகளை இன்று பிரதமர் என்ரிகோ லெட்டா சுற்றிப்பார்த்தார். அவருடன் ஐரோப்பிய கமிஷனின் தலைவர் ஜோஸ் மேனுவல் பர்ரோசோவும் சென்று பார்வையிட்டார். பின்னர் பர்ரோசோ, இத்தாலியில் உள்ள அகதிகளுக்கு உதவ 40 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்று கூறினார்.

படகில் தீ பிடித்ததை அடுத்து மக்கள் பயத்தில் ஒரு பக்கமாக வந்ததால் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. நாட்டின் மிக மோசமான இந்த சோகச்சம்பவத்தை இத்தாலி துக்கமாக அனுசரிக்க உள்ளது. இதுபோன்று அகதிகள் ஊடுருவலை தடுக்க இத்தாலியோ அல்லது ஐரோப்பிய யூனியனோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று லாம்பெடுசா பகுதி மக்கள் குறைபட்டுக் கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகிஸ்தான் தலிபான் கமாண்டர்கள் சுட்டுக்கொலை!
Next post பொதுநலவாய அமைப்புக்கான பிரித்தானியாவின் நிதியும் குறைப்பு!