அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதார வளர்ச்சி முக்கியம் -அமைச்சர் சரத் அமுனுகம!
Read Time:1 Minute, 24 Second
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் இதுவரையான காலத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார முன்னேற்றம் இலங்கைக்கு முக்கியமானதென சர்வதேச நிதித் திட்டமிடல் சிரேஸ்ட அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
தற்போது ஐரோப்பிய பொருளாதாரம் மலர்ச்சி கண்டு வருவதாகவும் அதனால் இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கேள்வி அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக தேயிலை மற்றும் ஆடை தொழிற்சாலை துறைகள் கூடிய வாய்ப்பு பெறும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் என்பவற்றின் மாநாட்டில் கலந்து கொள்ள நியூயோர்க் சென்றிருந்த அமைச்சர் இன்று நாடு திரும்பியுள்ளார்.
அதன் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Average Rating