52 காதலிகள் கொண்ட சட்டத்தரணி: சொத்துகள் தொடர்பாக யுவதியுடன் சட்டப் போராட்டம்!

Read Time:5 Minute, 0 Second

2544_352 காதலிகளைக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் பிரித்தானிய சட்டத்தரணியொருவர் அப்பெண்களில் ஒருவருடன், சொத்துகள் தொடர்பாக சட்ட ரீதியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

போல் பெக்ஸாண்டல் வோல்கர் எனும் இச்சட்டத்தரணி வருமானவரித்துறை விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவர். ஆனால், பல வருடங்கள் இவர் ஆபாசப் படத் தயாரிப்பு நிறுவனமொன்றையும் ஆண்களுக்கான பாலியல் சஞ்சிகையொன்றையும் நடத்தியுள்ளார்.

வெற்றிகரமாக இயங்கிய மேற்படி நிறுவனங்ககளை கடந்த வருடம் மற்றொருவருக்கு விற்பனை செய்துவிட்டார். அதற்கு முன்னர் மேற்படி ஆபாசப்படங்கள் மற்றும் சஞ்சிகை தயாரிப்புக்கு பணியாற்றிய ஏராளமான பெண்களுடன் அவர் உறவுகொண்டிருந்தாக கூறப்படுகிறது. 52 பெண்களை சுழற்சி முறையில் இவர் காதலிகளாக வைத்திருந்தாராம்.

இப்பெண்களிடம் தனது பாலியல் தேவைகளை பூர்த்திசெய்துகொள்வதற்காக அவர்களுக்கு பல பரிசுப்பொருட்களையும் 49 வயதான போல் வோல்கர் வழங்கினார்.

இப்பெண்களில் ஒருவரான நடேஷா யூஸ்டஸ் என்பவருடன்தான் தற்போது சட்ட ரீதியான மோதலில் போல் வோல்கர் ஈடுபட்டுள்ளார்.

நடேஷாவுடனான உறவு முறிந்ததால் அவருக்கு வழங்கிய 3 லட்சம் ஸ்ரேலிங் பவுண் (சுமார் 6 கோடி இலங்கை ரூபா) பெறுமதியான வீடொன்றையும் ரேஞ்ச் ரோவர் வாகனத்தையும் திருப்பித் தருமாறு போல் வோல்கர் கேட்கிறார். ஆனால், தான் போல் வோல்கரின் காதலியாக விளங்கியதாகவும் அதனால் இச்சொத்துக்களை திருப்பிக்கொடுக்க முடியாது எனவும் நடேஷா யூஸ்டஸ் கூறுகிறார்.

மேற்படி வீட்டிலிருந்து நடாஷாவை வெளியேற்றுவதற்கு போல் வோல்கருக்கு முன்னர் சொந்தமாக இருந்த நிறுவனம் முயற்சித்தபோது நீதிமன்றத்தை நாடினார் நடாஷா.

இது தொடர்பாக நடைபெறும் வழக்கிலேயே சட்டத்தரணி போல் பெக்ஸன்டேல் வோல்கரின் அந்தரங்க வாழ்க்கை விவகாரஙகள் நீதிமன்றில் அம்பலப்படுத்தப்பட்டன.

49 வயதான போல் வோல்கருககும் 25 வயதான நடாஷாவுக்கும் இடையிலான உறவுமுறை இவ்வழக்கு விசாரணையில் முக்கியத்துவம் பெற்றது.

தானும் போல் வோல்கரும் காதலர்களாக விளங்கியதாகவும் இருவரும் திருமணம் செய்துகொள்வது குறித்து கலந்துரையாடியதாகவும் நடேஷா கூறினார்.

ஆனால், தனது நிறுவனத்தில் பணியாற்றிய பெண்கள் குழவிலிருந்த ஒருவரே நடேஷா யூஸ்டஸ் என போல் வோல்கர் வாதிட்டார்.

பாலியல் படத் தயாரிப்பு நிறுவன அதிபர் எனும் பதம் தனக்கு தற்போது பொருந்ததாது எனவும் போல் வோல்கர் வாதிட்டார். ‘2 வருடங்களுக்கு முன்னர் என்னை அப்படி குறிப்பிட்டிருக்கலாம். ஆனால், தற்போது அது உண்மையில்லை. நூன் இப்போது மறுசீரமைக்கப்பட்ட மனிதன்’ என போல் வோல்கர் கூறினார்.

ஆனால் இந்த சட்டப்போராட்டத்தில் முதல் சுற்றில் போல் வோல்கருக்கு தோல்வியே கிடைத்தது.

நடாஷாவுக்கு அவர் அனுப்பிய காதல் கடிதங்களும் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டன.

ஆதனால், இவ்விருவருக்கும் காதல் தொடர்புகள் இருந்தன என்பதை நிராகரிக்க மறுத்த நீதிபதி, மேற்படி வீட்டுக்கும் வாகனத்துக்கும் நடாஷா உரிமை கோர முடியாது என தீர்ப்பளிக்கவும் மறுத்துள்ளார்.

இரு தரப்பினiரையும் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்துவதற்கான வாய்ப்பிருப்பதாகவும் விசாரணைகளின் முடிவில் இவ்வழக்கு வித்தியாசமான ஒரு வழக்காக தென்படலாம் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நிதி நெருக்கடி தீர்ந்ததும், குடியுரிமை சீர்திருத்தம் -பரக் ஒபாமா
Next post தலைமைப் பதவியை இலங்கைக்கு வழங்கக் கூடாது: மனித உரிமை கண்காணிப்பகம்!