இலங்கை தொடர்பில் பிரித்தானியாவிடம் பொருத்தமற்ற கொள்கை

Read Time:1 Minute, 37 Second

3074029751261904204UKஇலங்கை தொடர்பாக கோழைத்தனமான – பொருத்தமற்ற கொள்கையை பிரித்தானிய அரசாங்கம் கடைப்பிடிப்பதாக, பிரித்தானிய பாராளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழு குற்றம்சாட்டியுள்ளது.

கொழும்பில் அடுத்தமாதம் நடக்கவிருக்கும் கொமன்வெல்த் மாநாட்டில், பங்கேற்பதற்கு, மனித உரிமைகள் நிலையின் முன்னேற்றம் குறித்து நிபந்தனை விதித்திருக்க வேண்டும் என்றும் பிரித்தானிய பாராளுமன்ற வெளிவிவகாரக் குழு தெரிவித்துள்ளது.

இலங்கையில் தீவிரமான மனித உரிமை மீறல்கள் இன்னும் தொடர்வது வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், பிரித்தானியா இன்னும் அதிகமான கொள்கைகளை, கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்க முடியும் என்றும் இந்தக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

கொமன்வெல்த் மாநாட்டில், பங்கேற்கப் போவதாக பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் அறிவித்துள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய வெளிவிவகாரக் குழு இந்தக் கடுமையான கருத்தை வெளியிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பதுளையில் ஹெரோயினுடன் பெண்கள் கைது!
Next post வட மாகாணசபையின் ஐ.ம.சு.மு. உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம்!