வட மாகாணசபையின் ஐ.ம.சு.மு. உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம்!

Read Time:2 Minute, 3 Second

epdp.dak-mahindaவடமாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஏழு உறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரஸின் ஒரு உறுப்பினரும் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு அலரிமாளிகையில் இன்றுமாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

ஐ.ம.சு.மு.வின் பட்டியலில் போட்டியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன், ஈ.பி.டி.பி. சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள கந்தசாமி கமலேந்திரன், வவுனியா மாவட்டத்தில் வெற்றிபெற்ற ஏ.வி. தர்மபால செனவிரட்ன, மற்றும் ஏ.ஜயதிலக்க, மன்னார் மாவட்டத்தில் தெரிவான ரிப்கான் பதியுதீன், கிளிநொச்சி மாவட்டத்தில் வெற்றிபெற்ற ஈ.பி.டி.பி. உறுப்பினர் வை.நவநாதன், முல்லைத்தீவில் வெற்றிபெற்ற அஹமட் லெப்பை முஹமட் ஜனுபர், ஆகிய ஏழு பேரும் மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்ற ஹபிபூ முஹமட் ராசிக் ஆகிய எட்டுப்பேரே இன்றைய தினம் ஜனாதிபதி முன்னியில் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.

வடமாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களான எட்டுப்பேரும் கடந்த 08 ஆம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்க இருந்த போதிலும், அந்த வைபவம் ஒத்திவைக்கப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை தொடர்பில் பிரித்தானியாவிடம் பொருத்தமற்ற கொள்கை
Next post மனைவியை சுட்டுக் கொன்ற இந்திய வம்சாவழி நபர் இரண்டாவது மனைவியுடன் கைது!!