அமெரிக்க பொருளாதார நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி!!

Read Time:2 Minute, 39 Second

usa.flagஅமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டு திட்டம் அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 18 மேலதிக வாக்குகளால் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நிதி நெருக்கடியைத் தீர்க்க ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் உடன்பாடு கண்டுள்ளதாக அந்நாட்டு பாராளுமன்ற மேலவையின் மூத்த எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் நிலவி வரும் நெருக்கடியைச் சமாளிக்க எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி மற்றும் ஆளும் ஜனநாயகக் கட்சி எம்.பி.க்களிடையே புதன்கிழமை முக்கிய விவாதம் நடைபெற்றது. அப்போது, அரசியல்ரீதியிலான கருத்து வேறுபாடுகளை மறந்து சமரசத்தீர்வு எட்டப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக செனட் எனப்படும் மேலவையின் பெரும்பான்மைத் தலைவர் ஹாரி ரீட், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

‘இப்போது எட்டப்பட்டுள்ள சமரசத் திட்டத்தின் மூலம் நமது பொருளாதாரத்துக்கு ஸ்திரத்தன்மை ஏற்படும்´´ என்றும் அவர் கூறினார். இதன் மீது பாராளுமன்ற கீழவையில் விரைவில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரவு-செலவு திட்டத்திற்கு குடியரசுக் கட்சி ஒப்புதல் தர மறுத்தது.

மேலும், அமெரிக்காவில் நிலவும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க கடன் உச்சவரம்பை உயர்த்த ஆதரவு தரவும் குடியரசுக் கட்சி மறுத்து விட்டது.

17ஆம் திகதிக்குள் கடன் உச்சவரம்பை உயர்த்த வேண்டும். இல்லாவிட்டால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியை சுட்டுக் கொன்ற இந்திய வம்சாவழி நபர் இரண்டாவது மனைவியுடன் கைது!!
Next post அமெரிக்காவின் துணை மந்திரி ஆனார் இந்தியப் பெண்!!