65 வயதான பெண்ணைக் கொன்ற மகளும், கள்ளக்காதலனும் கைது!!

Read Time:3 Minute, 16 Second

arrested womenகொழும்பு, கொட்டாவ, கட்டுகுருந்த பிரதேசத்தைச் சேர்ந்த 65 வய தான நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவரை அவரது மகள் தனது கள்ளக் காதலனுடன் சேர்ந்து இரண்டரை வருடங்களுக்கு முன்னர் கொலை செய்து மலசலகூட குழிக்குள் போட்டிருந்த நிலையில் கடந்த 16 ஆம் திகதி மீட்கப்பட்டுள்ளது.

காணாமற் போயிருந்த இந்தப் பெண்ணின் தேடிக் கண்டுபிடிக்க மலசலகூடக் குழியை சோதனை செய்வதற்காக ஹோமாகம நீதவான் நீதிமன்ற நீதவான் யு ஆர்.பி. நெலுந்தெனியவிடம் கடந்த 9 ஆம் திகதி நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக் கொண்டதாக சட்டத்தரணி உபாலி செனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்தப் பெண் காணாமற் போன காலப் பகுதியில் தமது புதல்வியான அனுஷா நிலந்தியுடன் கடுக்குருந்தவிலுளள வீட்டில் வசித்து வந்துள்ளதுடன் புதல்வியின் கணவர் மத்திய கிழக்கில் தொழில் புரிந்துள்ளார். இவர்களது புதல்விகள் இருவரும் இந்த வீட்டில் தாயுடனும் பாட்டியுடனும் வாழ்ந்து வநதுள்ளனர்.

இரண்டரை வருடங்களுக்கு முன்னர் வீடு கட்டும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அங்கு நிர்மாணப் பணிகளில் ஈடுபட்ட மேசன் ஒருவருக்கும் கொலையுண்டவரின் மகளுக்குக் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

தமது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்தபோதே அவர் இந்த மேசன் பாஸையும் திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக அவரது தாயார் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டில் சச்சரவு ஏற்பட்டுள்ளது.

இதன் பின்னர் அவரது தாய் காணாமல் போனது தொடர்பாக முதலாவது தகவல் கிடைத்தபோது அவரது மகள் இரண்டாவது கணவர் மேசன் பாஸுடன் தனியாக வாழ்ந்துள்ளார்.

மத்திய கிழக்கிலிருந்து திரும்பிய இவரது முதல் கணவர் தமது இரு புதல்விகளுடன் வாழ்ந்துள்ளார் என விசாரணை நடத்தும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த மலசலகூடக் குழிக்குள் போடப்பட்டிருப்பதாக அவரது மகளும் மற்றும் இரண்டாவது கணவர் தமது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்தே மீண்டும் நீதிமன்ற உத்தரவின்பேரில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டு உடல் மலசலக்கூட குழிக்குளிருந்து மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யபபட்டுள்ளனர்.

மிரிஹான பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஈ.பி.ஆர்.எல்.எவ். உறுப்பினர் முதலமைச்சர் முன் சத்தியப் பிரமாணம்!
Next post மாட்டை விரட்டிச் சென்ற முதியவர் கால்இடறி வீழ்ந்து மரணம்