மாட்டை விரட்டிச் சென்ற முதியவர் கால்இடறி வீழ்ந்து மரணம்
Read Time:59 Second
மாட்டை விரட்டிச் சென்ற முதியவர் கால்தவறி இடறி வீழ்ந்ததில் மரணமடைந்த சம்பவம் அக்கரைப்பற்றில் இடம்பெற்றுள்ளது.
அம்பாறை மாவட்டம்அக்கரைப்பற்று பனங்காட்டைச் சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு நேற்று மரணமடைந்துள்ளார்.
இடறி வீழ்ந்தவர் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே மரணமடைந்துள்ளதாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள பிரேதம் வைத்திய பரிசோதனையின் பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்ததாக மேலும் தெரிவித்துள்ளனர்.
Average Rating