பிரெஞ்சு மக்கள் மீது வேவு பார்ப்பது குறித்து அழைக்கப்பட்டுள்ள அமெரிக்கத் தூதர்!!

Read Time:3 Minute, 54 Second

009அமெரிக்கா பிற நாடுகளை வேவு பார்ப்பதை ஆதாரத்துடன் எட்வர்ட் ஸ்னோடென் வெளியிட்டது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது பிரான்ஸ் நாட்டுப் பத்திரிகையான லெ மோன்டே அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜென்சி பல்லாயிரக்கணக்கான பிரெஞ்சு மக்களின் தொலைபேசிப் பதிவுகளை சேகரித்துள்ளதாக தனது பத்திரிகையில் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி முதல் 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முடிய 70.3 மில்லியன் தொலைபேசி அழைப்புகள் இந்த ஏஜென்சியால் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. இந்த தகவல் குறித்து பிரான்சின் உள்துறை அமைச்சரான மானுவல் வல்ஸ் தனது அதிர்ச்சியைத் தெரிவித்துள்ளார். ஒரே கூட்டணியில் இருக்கும் நாடுகளில் இது போல் உளவு பார்ப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும் என்று ஐரோப்பிய வானொலியில் வல்ஸ் தெரிவித்தார்.

சிரியாவின் அமைதிப் பேச்சுவார்த்தை குறித்த தனது ஐரோப்பியப் பயணத்தின் தொடக்கமாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி பாரிஸ் வந்துள்ளார். இந்தத் தருணத்தில் தோன்றியுள்ள இந்தப் பிரச்சினை அரசியல் சார்புடையதாக மாற வாய்ப்புள்ளது. இது குறித்து விளக்கம் கேட்பதற்காக பிரான்ஸ் நாட்டின் அமெரிக்கத் தூதரான பிரான்ஸ் சார்லஸ் ரிவ்கின்னை, பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சர் லாரென்ட் பாபியஸ் அழைத்துள்ளார். லக்சம்பர்கில் நடைபெறும் ஐரோப்பிய யூனியன் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருக்கும் இவர் பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் ரிவ்கின்னை சந்திக்க உள்ளார்.

தன்னை பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் அழைத்தது குறித்து ரிவ்கின் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆயினும், அமெரிக்க, பிரெஞ்சு உறவுகள் நெருக்கமானவை என்று அவர் வலியுறுத்தினார். ராணுவம், உளவுத்துறை, சிறப்புப் படைகள் போன்ற அனைத்து பிரிவுகளிலும் இரு நாடுகளும் ஒத்த தன்மை கொண்டவையாகத் திகழ்கின்றன என்று ரிவ்கின் குறிப்பிட்டுள்ளார்.

பிரிசம் எனப்பட்ட இந்தத் தகவல் சேகரிப்பு பயங்கரவாதத் தொடர்புகளை உடையவர்களாக சந்தேகப்பட்டவர்களின் இணைப்புகள் மற்றும் பிரெஞ்சு நாட்டு அரசியல், வணிகம் சார்ந்த தொடர்புகள் கொண்ட நபர்களின் இணைப்புகள் என்று லெ மோன்டே பத்திரிகை குறிப்பிட்டிருந்தது. இது குறித்து கடந்த ஜூலை மாதமே பிரான்சின் வழக்கறிஞர்கள் தங்கள் பூர்வாங்க விசாரணைகளைத் தொடங்கினர் என்பதுவும் குறிப்பிடத்தக்கதாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை கெசினோ முதலீட்டில் பெக்கர்ஸுடன் கரம் கோர்க்கிறார் மைக்கல் கிளார்க்!!
Next post இங்கிலாந்து இளவரசர் வில்லியம் குழந்தைக்கு 23–ந் தேதி பெயர் சூட்டு விழா!!