யுவதியை பதம்பார்த்த கத்தி!!
Read Time:1 Minute, 0 Second
கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள பிரபல ஆடை விற்பனை நிலையமொன்றில் ‘கொத்து ரொட்டி’ தயாரிக்கும் கத்தியொன்றினால் தாக்குதலுக்கு உள்ளான யுவதியொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் வெள்ளவத்தை ஹோட்டலொன்றில் பணியாற்றி வரும் கொத்து ரொட்டி தயாரிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காயத்துக்குள்ளான யுவதி களுபோவில தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating